Header image alt text

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமைக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். விஜயதாச ராஜபக்ஷ பதில் தலைவராக நியமிக்கப்பட்டமை, சட்டத்திற்கு புறம்பானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளைஇ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Read more

ஸ்ரீ லங்கன் விமானச் சேவை நிறுவனம் உள்ளிட்ட 5 அரச நிறுவனங்களின் தலைவர்கள் இந்தவாரம் கோப் எனப்படும் அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், தேசிய வர்த்தக முகாமைத்துவ நிறுவனம் மற்றும் மஹாபொல உயர் கல்வி உதவித்தொகை நிதியம் ஆகிய நிறுவனங்களின் தலைவர்களே குறித்த குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான துணை அமைச்சர் சன் ஹையன்(Sun Haiyan) இன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளார். 2 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அவர் நாட்டிற்கு வருகை தருவதாக தினகரன் பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகளை அவர் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பெயர் மற்றும் நிறைவேற்று குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கவுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்று குழுக் கூட்டம் நேற்று எத்துல்கோட்டே பகுதியிலுள்ள விருந்தகம் ஒன்றில் இடம்பெற்றது. Read more

தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போன, 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக அடையாள அட்டையை வழங்குவதற்கான கால எல்லை எதிர்வரும் ஜூன் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. பிறப்புச்சான்றிதழ் இல்லாமையினால் இதுவரை அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ள நபர்களுக்காக இந்த வேலைத்திட்டம் செயற்படுத்தப்படுவதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் G.பிரதீப் சபுதந்திரி தெரிவித்தார். இந்த வேலைத்திட்டம் கடந்த மார்ச் 31 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்டிருந்தது. Read more

தியத்தலாவயில் இடம்பெற்ற 2024 Foxhill கார் பந்தய விபத்து தொடர்பில் போட்டியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 2024 Foxhill கார் பந்தயம் 21 அன்று தியத்தலாவ கார் பந்தயத் திடலில் ஆரம்பமானது. பல போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த கார் பந்தயத்தைப் பார்வையிட சுமார் ஒரு இலட்சம் பேர் வருகை தந்திருந்தனர். Read more

தபால் திணைக்களத்தின் இணையத்திற்கு இணையாக காணப்படும் போலி இணையத்தளங்களை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு எச்சரித்துள்ளது. இவ்வாறான 5 போலி இணையத்தளங்களை இணையத்திலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்தார். இவ்வாறான இணையத்தளங்களுக்குள் பிரவேசித்து 35 பண மோசடி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.

2019 ஏப்ரல் 21 ம் திகதி பயங்கரவாதிகளினால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் ஐந்து வருடங்கள் நிறைவு பெறுகின்றன. தாக்குதலில் உயிர்நீத்த அனைவருக்கும் எமது இதயபூர்வ அஞ்சலிகளை சமர்ப்பிப்பதுடன் அவர்களின் ஆன்மா அமைதி பெற பிரார்த்திக்கின்றோம்.

மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தொடர்புபட்ட சூத்திரதாரிகளை கைது செய்ய கோரி பொதுமக்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் மட்டு காந்தி பூங்காவின் முன்னால் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதல் இடம்பெற்று 5 வருட நினைவு தினத்தையிட்டு கூத்திரதாரிகளை கைது செய்ய கோரி சமூக செயற்பாட்டாளர்கள் கவனயீர்ப்பு ஆர்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். Read more

தியத்தலாவ Foxhill கார் பந்தயத்தின் போது இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளது.- தியத்தலாவ Foxhill கார் பந்தயத் திடலில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் 21 பேர் வரை காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்தூவ தெரிவித்தார். Foxhill 2024 கார் பந்தயத்தின் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. போட்டியில் பங்கேற்ற காரொன்று திடலை விட்டு விலகி பார்வையாளர்கள் மீது மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.