search icon
என் மலர்tooltip icon
    • மும்பை அணி தரப்பில் சூர்யகுமார் யாதவ் சதம் விளாசினார்.
    • ஐதராபாத் அணி தரப்பில் புவனேஸ்வர் குமார், கம்மின்ஸ், யான்சன் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

    வான்கடே:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் 55-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி ஐதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது. மும்பை தரப்பில் பாண்ட்யா, சாவ்லா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதனையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் - இஷான் கிஷன் களமிறங்கினர். இஷான் கிஷன் 9 ரன்னிலும் ரோகித் 4, நமன் 0 என விக்கெட்டை இழந்தனர். இதனால் மும்பை அணி 31 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து திணறியது.

    இதனை தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் சதம் விளாசினார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.

    சூர்யகுமார் யாதவ் 102 ரன்னிலும் திலக் வர்மா 37 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 17.2 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 174 எடுத்து வெற்றி பெற்றது. ஐதராபாத் அணி தரப்பில் புவனேஸ்வர் குமார், கம்மின்ஸ், யான்சன் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

    • இந்த படத்தில் கவின், லால், கீதா கைலாசம் ஆகியோர் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
    • ஸ்டார் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    டாடா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கவின் மற்றும் இயக்குநர் இளன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ஸ்டார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மே 10 ஆம் தேதி இந்த படம் ரிலீசாக இருக்கிறது.

    சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இப்படத்தின் சென்சார் விவரங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ஸ்டார் படத்திற்கு சென்சார் போர்டு "யு" சான்றிதழ் வழங்கியுள்ளது.

    இந்த படத்தில் கவின், லால், கீதா கைலாசம், அதிதி பொஹங்கர், ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மண்டி தொகுதி பாஜக வேட்பாளராக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அறிவிக்கப்பட்டுள்ளார்
    • இந்த தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் அவர் ஈடுபட்டு வருகிறார்

    இமாச்சலப் பிரதேசம், மண்டி தொகுதி பாஜக வேட்பாளராக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில், கங்கனா தன்னை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுடன் ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார்.

    நேற்று கங்கனா மண்டி தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, "நான் ராஜஸ்தான், மேற்கு வங்கம், டெல்லி, மணிப்பூர் என நாடு முழுவதும் எங்கு சென்றாலும் எனக்கு வியப்புதான். ஏனெனில், அந்த அளவுக்கு மக்கள் என்மீது அன்பு பொழிந்து வருகின்றனர். நடிகர் அமிதாப் பச்சனுக்குப் பிறகு, இந்தத் துறையில் யாருக்காவது இவ்வளவு அன்பும் மரியாதையும் கிடைக்கிறது என்றால், அது எனக்குத்தான். இதை என்னால் நம்பிக்கையுடன் சொல்ல முடியும்" என்று பேசியுள்ளார்.

    இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் கங்கனாவை கலாய்த்து வருகின்றனர். 

    • ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 48 ரன்னில் அவுட் ஆனார்.
    • மும்பை தரப்பில் பாண்ட்யா, சாவ்லா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    வான்கடே:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் 55-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா- டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 56 ரன்கள் குவித்தது. மோசமாக விளையாடிய அபிஷேக் சர்மா 16 பந்தில் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அகர்வால் 5 ரன்னில் அவுட் ஆனார்.

    அதிரடியாக விளையாடிய டிராவிஸ் 48 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த நிதிஷ் ரெட்டி 20, கிளாசன் 2, யான்சன் 17, ஷபாஸ் அகமது 10, சமத் 3 என நடையை கட்டினர்.

    இதனையடுத்து கேப்டன் பேட் கம்மின்ஸ் கடைசி நேரத்தில் பொறுப்புடன் ஆடி ஸ்கோரை உயர்த்தினார். இதனால் ஐதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது. மும்பை தரப்பில் பாண்ட்யா, சாவ்லா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    • சிறுவன் நிலை தடுமாறி கீழே விழுகிறான்.
    • சிறுவனை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    மகாராஷ்டிரா மாநிலத்தின் பூனேவை அடுத்த லொஹேகன் பகுதியை சேர்ந்த சிறுவன் ஷம்பு காலிதாஸ் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த போது உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    இது தொடர்பான வீடியோவில் சிறுவன் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடுகிறார். குறிப்பிட்ட நேரத்தில் சிறுவன் பேட்டிங் செய்த தனது நண்பருக்கு பந்துவீசுகிறான். பந்தை எதிர்கொண்ட நண்பர் அதனை வேகமாக அடித்துள்ளார்.

    இந்த பந்து சிறுவன் பிறப்புறுப்பின் மீது வேகமாக தாக்கியது. இதில் சிறுவன் நிலை தடுமாறி கீழே விழுகிறான். பிறகு சில நொடிகளில் மேலே எழுந்த சிறுவன் அடுத்த சில நொடிகளில் நிற்க முடியாமல் கீழே விழுகிறான்.

    அப்படி விழுந்த சிறுவன் மீண்டும் எழவே இல்லை. கீழே விழுந்த சிறுவனை உடனே அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    எனினும், மருத்துவமனைக்கு சென்ற சிறிது நேரத்தில் சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தை விபத்தால் நேர்ந்த உயிரிழப்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். 

    • 5 வயது சிறுமியை 2 நாய்கள் கடித்ததில் பலத்த காயம் அடைந்தார்
    • சிறுமியை காப்பாற்றச் சென்ற தாயையும் நாய்கள் கடித்தது

    சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவுக்குள் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை 2 நாய்கள் கடித்ததில் பலத்த காயம் அடைந்தார். சிறுமியை காப்பாற்றச் சென்ற தாயையும் நாய்கள் கடித்தது.

    நாய்கள் கடித்ததால் தலையில் படுகாயம் அடைந்த சிறுமி, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாக நாய்களின் உரிமையாளர் புகழேந்தி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

    இந்நிலையில், சிறுமியை கடித்த 2 நாய்களையும் வீட்டிலிருந்து 7 நாட்களுக்குள் அப்புறப்படுத்த உரிமையாளருக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    இந்த நோட்டீஸ் நாயின் உரிமையாளர் புகழேந்தியின் வீட்டில் ஒட்டப்பட்டுள்ளது.

    அந்த நோட்டிசில், "நாய்களை உரிமம் இன்றி வளர்த்ததுடன், முறையாக பராமரிக்கப்படவில்லை எனவும் 7 நாட்களுக்குள் நாய்களை அப்புறப்படுத்த தவறினால் மாநகராட்சி இந்த நாய்களை பறிமுதல் செய்யும் என்றும், நாயின் உரிமையாளர் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், இந்த நாய்களை உரிமையாளர் எங்கிருந்து வாங்கினார் என்பதற்கான விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் கேட்டுள்ளனர்.

    • 16 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.
    • இதில் 11 பள்ளிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

    குஜராத் மாநிலத்தில் நாளை 26 தொகுதிகளில் 25-ற்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. பல பள்ளிக்கூடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வாக்குப்பதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் இன்று அகமதாபாத்தில் உள்ள 16 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில் மூலம் விடுக்கப்பட்டுள்ளது. இந்த 16 பள்ளிக்கூடங்களில் 11 பள்ளிக்கூடங்களில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

    இதனைத் தொடர்ந்து மிரட்டல் வந்துள்ள பள்ளிகளில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது சந்தேகத்திற்குரிய வகையிலான எந்த பொருட்களும் கைப்பற்றப்படவில்லை. பின்னர், அது போலி மிரட்டல் எனத் தெரியவந்தது.

    சமீபத்தில் டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு மிரட்டல் வந்தது. அதேபோன்றுதான் தற்போது இங்கேயும் மிரட்டல் வந்துள்ளது. மெயில்கள் ரஷியாவில் பயன்படுத்தப்படும் "mail.ru" மூலம் அனுப்பப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரிய எந்த பொருட்களும் சோதனையில் கண்டுபிடிக்கப்படவில்லை. இது போலியான மிரட்டில் என்பது தெளிவாக தெரியவந்துள்ளது என கிரைம் பிரிவு இணை கமிஷனர் ஷரத் சிங்கால் தெரிவித்துள்ளார்.

    இந்த இ-மெயில் தகவலை புறந்தள்ளிவிட்டு, மக்கள் பயமின்றி நாளை வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    • இம்மாணவர்களின் உயிரிழப்பு உண்மையிலேயே மருத்துவ உலகிற்கும் தமிழ்நாட்டிற்கும் பேரிழப்பாகும்
    • மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பெற்றோர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்

    கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அருகே இராஜாக்கமங்கலம் கிராமம் லெமூர் கடற்கரையில் கடல் அலையில் சிக்கி உயிரிழந்த மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பெற்றோர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கன்னியாகுமரி மாவட்டம். அகஸ்தீஸ்வரம் வட்டம் இராஜாக்கமங்கலம் கிராமம் மெமூர் கடற்கரையில் இன்று காலை சுமார் 10 மணியளவில் திருச்சி தனியார் மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் கால் நனைப்பதற்காக கடலில் இறங்கியபோது. கடல் அலை அதிகமாக இருந்ததால் எதிர்பாராதவிதமாக கடல் அலை இழுத்துச் சென்றதில் நெய்வேலியை சேர்ந்த காயத்ரி (25), கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சர்வதர்ஷித் (23), திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரவின்சாம் (23), தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சாருகவி (23) மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் (24)ஆகிய 5 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

    மருத்துவக் கல்வி பயின்று உயிர்காக்கும் மருத்துவராகி மருத்துவச் சேவையில் ஈடுபடவிருந்த இம்மாணவர்களின் உயிரிழப்பு உண்மையிலேயே மருத்துவ உலகிற்கும் தமிழ்நாட்டிற்கும் பேரிழப்பாகும்.

    விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் உடனடியாக மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியதோடு, காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து உரிய உயிர்காப்பு சிகிச்சைகளும் அளிக்கப்படுவதை உறுதி செய்யயும் உத்தரவிட்டிருக்கிறேன்.

    இந்தத் துயரகரமான சம்பவத்தில் தம் பிள்ளைகளை இழந்து வாடும் பெற்றோர்களுக்கும். அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்ற வழங்கப்படும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மே 10-ந்தேதி விண்ணப்பித்துள்ள நிறுவனங்கள் விவரம் வெளியிடப்படும்.
    • விண்ணப்பங்களை திரும்பப் பெற மே 17-ந்தேதி கடைசி நாளாகும்.

    96,317 கோடி ரூபாய் ஸ்பெக்ட்ரம் ஏலம் ஜூன் மாதம் 6-ந்தேதியில் இருந்து நடைபெற இருக்கிறது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸின் ஜியோ, பாரதி ஏர்டெல், வோடாஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் பங்கேற்க இருக்கின்றன. இந்த மூன்று நிறுவனங்களும் விண்ணப்பத்துள்ளன.

    கடந்த 2022-ல் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதானி குரூப் நிறுவனம் விண்ணப்பத்திருந்தது. தற்போது புதிதாக எந்த நிறுவனமும் ஏலத்திற்காக விண்ணப்பிக்கவில்லை.

    800 மெகா ஹெர்ட்ஸ், 900 மெகா ஹெர்ட்ஸ், 1800 மெகா ஹெர்ட்ஸ், 2100 மெகா ஹெரட்ஸ், 2300 மெகா ஹெர்ட்ஸ், 2500 மெகா ஹெர்ட்ஸ், 3300 மெகா ஹெர்ட்ஸ், 26 ஜிகா ஹெர்ட்ஸ் அலைவரிசைகளின் அனைத்தும் ஸ்பெக்டரம் ஏலத்தின் ஒரு பகுதியாகும். மொத்த அலைவரிசைகள் அடிப்படை விலை 96317 கோடி ரூபாய் ஆகும்.

    இந்த ஸ்பெக்ட்ரம் 20 வருடத்திற்கு ஒதுக்கப்படும். ஏலம் எடுத்த நிறுவனம் 20 சம வருடாந்திர தவணையில் பணத்தை செலுத்த வேண்டும். குறைந்தபட்சம் 10 வருடம் முடிவடைந்த நிலையில், வரவிருக்கும் ஏலத்திற்காக சரண்டர் செய்யும் வாய்ப்பை தகவல்தொடர்பு துறை வழங்கியுள்ளது.

    மே 10-ந்தேதி விண்ணப்பித்துள்ள நிறுவனங்கள் விவரம் வெளியிடப்படும். விண்ணப்பங்களை திரும்பப் பெற மே 17-ந்தேதி கடைசி நாளாகும். மே 20-ந்தேதி ஏலத்தில் கலந்து கொள்ளும் நிறுவனங்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.

    • AX3 வேரியண்ட்-ஐ விட ரூ. 3 லட்சம் வரை குறைவு.
    • புது வேரியண்ட் அதிக வாடிக்கையாளர்களை சென்றடையும்.

    மஹிந்திரா நிறுவனம் XUV700 மாடலின் புதிய 7 சீட்டர் வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. XUV700 புதிய வேரியண்ட் MX என அழைக்கப்படுகிறது. இதன் விலை ரூ. 15 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது XUV700 AX3 வேரியண்ட் உடன் ஒப்பிடும் போது ரூ. 3 லட்சம் வரை குறைவு ஆகும்.

    இதுவரை XUV700 MX வேரியண்ட் ஐந்து பேர் அமரும் இருக்கை அமைப்பில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதன் விலை ரூ. 14 லட்சத்து 60 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது அதிக இருக்கை அமைப்பில் கிடைப்பதால், XUV700 புது வேரியண்ட் மேலும் அதிக வாடிக்கையாளர்களை சென்றடையும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

     


    மஹிந்திரா XUV700 புதிய MX வேரியண்டில் ஏழு இன்ச் அளவில் MID டிஸ்ப்ளே, எட்டு இன்ச் அளவில் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரியர் ஏ.சி. வெண்ட்கள், எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் வசதி கொண்ட ORVMகள் வழங்கப்பட்டுள்ளன.

    புதிய வேரியண்டிலும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 153 ஹெச்.பி. பவர், 360 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    ×