சீனாவில் இருந்து ஹம்பாந்தோட்டைக்கு எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம்

Friday, March 29th, 2024 at 11:15 (SLT)

இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ள எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் நிர்மாணப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க சீனாவின் சினோபெக் நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

தென்னாப்பிரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி

Friday, March 29th, 2024 at 11:04 (SLT)

தென்னாப்பிரிக்காவின் லிம்போபோ மாகாணத்தில் வியாழக்கிழமை ஈஸ்டர் கொண்டாட்டத்திற்காக சென்ற பயணிகள் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்ததில் 45 பேர் பலியாகினர். நல்வாய்ப்பாக படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ள 8 வயது சிறுமி விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டு சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வாசிக்க >>>

இலங்கையில் எச்ஐவி தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு

Friday, March 29th, 2024 at 10:57 (SLT)

நாட்டில் எச்ஐவி தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கையின் தேசிய எயிட்ஸ் தடுப்பு திட்டத்தின் பணிப்பாளர் டாக்டர் ஜானகி விதானபத்திரன தெரிவித்துள்ளார்.


50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 50 000 வீடுகள் வழங்க நடவடிக்கை : அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

Friday, March 29th, 2024 at 10:53 (SLT)

வட மாகாணத்திற்கு, தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 50 000 சூரியமின்னுற்பத்தி இலவச வீட்டுத் திட்டம் ஜனாதிபதியின் இணக்கத்தோடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

மேலும் வாசிக்க >>>

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : கிட்ணண் செல்வராஜ்

Friday, March 29th, 2024 at 10:51 (SLT)

1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார்.
சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத் தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.

மேலும் வாசிக்க >>>

நாட்டு மக்களிடம் ரஞ்சன் விடுத்துள்ள கோரிக்கை

Thursday, March 28th, 2024 at 12:43 (SLT)

இந்த நாட்டை வீணடித்த, நாடாளுமன்றத்தில் உள்ள 225 பேருக்கு மீண்டும் சந்தர்ப்பம் வழங்க வேண்டாம் என மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டது

Thursday, March 28th, 2024 at 12:37 (SLT)

கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளது.இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளை நவீனமயப்படுத்தாமல் நாட்டின் எதிர்காலம் குறித்து நம்பிக்கை வைக்க முடியாது : ஜனாதிபதி

Thursday, March 28th, 2024 at 12:33 (SLT)

கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளை எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் நவீனமயப்படுத்தாமல் நாட்டின் எதிர்காலம் குறித்து நம்பிக்கை வைக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது

Thursday, March 28th, 2024 at 12:30 (SLT)

ஆப்கானிஸ்தானில் அதிகாலை 5.44 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் அதிகாலை 5.44 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.2-ஆக பதிவாகியுள்ளது. பூமிக்கு அடியில் 124 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்நிலநடுக்கத்தால் வீடுகள் இலேசாக அதிர்ந்தது.

மேலும் வாசிக்க >>>

McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்

Thursday, March 28th, 2024 at 12:27 (SLT)

அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது.
இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஜப்பான் முதலீட்டில் புறக்கோட்டை மிதக்கும் சந்தை மேம்பாட்டு திட்டம் : நகர அபிவிருத்தி அதிகார சபை

Thursday, March 28th, 2024 at 8:10 (SLT)

புறக்கோட்டை மிதக்கும் சந்தையை மீண்டும் புத்துயிர் பெறச் செய்வதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு ஜப்பானிய முதலீட்டாளரொருவர் முன் வந்துள்ளார். அதற்கான ஆரம்ப புரிந்துணர்வு ஒப்பந்தம் புதன்கிழமை (27) பத்தரமுல்ல நகர அபிவிருத்தி அதிகாரசபையில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத் மற்றும் ஜப்பானிய முதலீட்டாளர் அகிரா ஹிரோஸ் தலைமையில் கைசாத்திடப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

தேர்தலில் போட்டியிட மறுத்த நிர்மலா சீதாராமன்

Thursday, March 28th, 2024 at 8:01 (SLT)

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் “தேர்தலில் போட்டியிடும் அளவிற்கு தன்னிடம் பணம் இல்லை” என இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

பைடனின் நிலைப்பாட்டில் மாற்றம்: பாராட்டிய ஹமாஸ்

Thursday, March 28th, 2024 at 7:55 (SLT)

ஐக்கிய நாடுகள் சபையில் அண்மையில் அமெரிக்கா, இஸ்ரேலின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.அது, அமெரிக்காவின் பங்காளிகள், விமர்சகர்கள் என இரு தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

SLPP யின் நிறைவேற்று சபை கூட்டம் இன்று

Wednesday, March 27th, 2024 at 12:38 (SLT)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபை இன்று (27) கூடவுள்ளது.இந்த ஒன்றுகூடல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று நடைபெறவுள்ளது.

மேலும் வாசிக்க >>>

நாராம்மல பகுதியில் துப்பாக்கிச் சூடு : ஒ​ருவர் பலி

Wednesday, March 27th, 2024 at 8:19 (SLT)

நாரம்மல பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொள்ளையடிப்பதற்காக வந்த மூவரில் ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>